நைஸ் நகர தாக்குதல்: முன்கூட்டிய மிரட்டல் விடுத்த ஐஸ் தீவிரவாதி
நைஸ் நகரில் தாக்குதல் நடத்தவிருப்பதை முன்கூட்டியே ஐஎஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 14 ஆம் திகதி நைஸ் நகரில் Bastille Day கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது ஐஸ் தீவிரவாதி ஒருவன் டிரக் ஏற்றி 84 பேரை கொலை செய்தான், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்தவிருப்பதை ஐஸ் தீவிரவாதிகள் முன்கூட்டியே அறிவித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது, அதில் தீவிரவாதி ஒருவன், ஈராக்கில் உள்ள மொசுல் நகரில் வைத்து, இரண்டு பிணையக்கைதிகளை மண்டியிட வைத்துள்ளான், இதனை அப்பகுதி மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
அதில் பேசும் ஐஎஸ் தீவிரவாதி, பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டே, உங்கள் குடிமக்கள் மீண்டும் மண்ணில் ரத்தம் சிந்துவார்கள், பாரிஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதல் போன்றே நைஸ் மற்றும் Marseilles நகரில் தாக்குதல் நடத்துவோம்.
இதுதொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என கூறுகிறார். இந்த வீடியோ terror group’s Amaq என்ற தீவிரவாதிகளின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய Mohamed Lahouaiej-Bouhlel என்ற தீவிரவாதியும் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.