நெடுஞ்சாலையில் பாரிய மோதல். அறுவர் காயம்.
கனடா-ரொறொன்ரோ கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நடு இரவிற்கு சிறிது பின்னர் நெடுஞ்சாலை 427 கிழக்கு லேன்களிற்கு அருகில் நடந்துள்ளது.
மூன்று பேர்கள் இருந்த விமான நிலைய உல்லாச ஊர்தி ஒன்று நால்வர் இருந்த காருடன் பின்பக்கமாக இடித்துள்ளது. நெடுஞ்சாலை 427 மற்றும் கிப்லிங் அருகில் சம்பவம் நடந்துள்ளது.
ஆரம்பத்தில் இரு வாகனங்கள் தான் விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதென கருதப்பட்டது.ஆனால் சாட்சியங்களுடன் பேசிய பின்னர் மூன்றாவது வாகனம் ஒன்றும் சம்பந்தப்பட்டதாகவும் ஆனால் இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
24-வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
20-வயதுடைய ஆண் ஒருவரும் 18-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மற்றும் இருவர் சாதாரண காயங்களுடன் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.