ஒட்டாவா- மத்திய நீதி அமைச்சர் ஜோடி வில்சன்-றெபவுட் இளைஞர்களிற்கு மரியுவான விற்பதற்கு 14-வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார். மரியுவானா சட்டபூர்வமாக்கப்பட்ட பின்னர் அதனை சிறுவர்களின் கைகளிற்கு எட்டாத வகையில் செய்யும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மசோதாவின் முக்கிய நோக்கம் கனடியர்களை பாதுகாப்பதென அரசாங்கம் தெரிவிக்கின்றது.
மசோதாவின் பிரகாரம் இளைஞர்களிற்கு கஞ்சாவை விற்பது அல்லது கொடுப்பவர்களிற்கு அல்லது கஞ்சா சம்பந்தமான குற்றங்களிற்கு இளைஞர்களை உபயோகிப்பவர்களிற்கு கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு அதிகபட்சம் 14ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது. 16-வயதிற்கு உட்பட்டவர்களை கஞ்சா உற்பத்தி, குழந்தைகள் ஆபாசம் மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தல் போன்றனவற்றிற்கும் அதே அதிக பட்ச சிறைத்தண்டனை.
கடுமையான தண்டனையை இச்சட்டத்தில் ஏற்படுத்தியதற்காக தான் மன்னிப்பு கோரப்போவதில்லை என வில்சன்-றேபோல்ட் தெரிவித்தார். விவாதம், கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகளிலும் பாராளுமன்றத்தில் மட்டுமல்லாது நாடு பூராகவும் நன்மை பயக்கும் என தான் அறிவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகில் கஞ்சா உபயோகிப்பதில் அதிக அளவிலான இளைஞர்கள் கனடாவில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.