நீதிமன்ற உத்தவை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் இருப்பது ஒரு சட்டமே. வடக்குக்கு ஒரு நீதி. கிழக்குக்கு ஒர நீதி என்று சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது.
எவராக இருந்தாலும் குற்றம் இழைத்தவர்களுக்கு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர்களுக்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.