நீதன் சண் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றார்
ஒண்டாரியோ பாராளுமன்ற தேர்தலில் திரு.ரோமன் சோ அவர்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து வெற்றிடமாக உள்ள சிற்றி கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என ஒக்டோபர் 5ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக அறியப்படுகின்றது .
தேர்த்தல் ஜனவரி நடுப்பகுதியில் குளிர் காலத்தில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவருகின்றது. கல்காபுறோவில் வார்டு- 42இல் நடைபெறும் இத்தேர்தலில் பொது மக்களிற்கு நன்கு அறிமுகமான திரு.நீதன் சண் அவர்கள் களமிறங்க உள்ளதாக அறியப்படுகின்றது . இவரோடு வழமை போல இந்னோர் தமிழரும் போட்டியிட உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனன். இவர்களுடன் ஓர் சீன இனத்தை சேர்ந்தவரும் போட்டியிட உள்ளார்.