நிலவை அணுகுண்டு போட்டு அழிக்க திட்டம்! ஆரம்பமாகியது விண்வெளிப்போர்
உலகத்தையே உலுக்கும் அளவிற்கு வல்லமை மிக்க நாடு அமரிக்கா என்பதனை யாராலும் மறுக்க முடியாது. அதேபோன்று மிகப்பயங்கரமான சதித் திட்டங்களை தீட்டுவதிலும் ஒரு வகையில் அமெரிக்காவிற்கு நிகர் அமெரிக்கா மட்டும் தான் எனலாம்.
இந்த நிலையில் நிலவை அணுகுண்டு போட்டு அதனை முற்று முழுதாக பஷ்பமாக்கி விட அமெரிக்கா இரகசிய திட்டம் தீட்டியது என்றால் நம்ப முடியாத ஒன்று தான் ஆனாலும் இது உண்மை.
1958ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்கா இந்த நாசகாரசெயலை செய்ய திட்டமிட்டது. இதற்கு Project A119 பெயரிடப்பட்டிருந்தது.
இது கற்பனையில் உருவாக்கப்பட்ட கதை அல்ல, 1957ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தனது செயற்கைக்கோளினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது அந்த நாட்டிற்கு மகிழ்ச்சிதான் ஆனால் மறுபக்கம் அமெரிக்காவிற்கு பொறாமையை தூண்டிவிட்டது.
சோவியத் ஒன்றியம் வெற்றிகரமான விண்வெளி ஆராய்ச்சியில் கால் பதித்தமை அமெரிக்காவிற்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அந்த காலம் இரு வல்லரசுகளுக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது.
பின்னர் சோவியத் ஒன்றியத்திற்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும், அதன் வளர்ச்சியை விட ஒரு படி மேல் சென்று உலகையே ஆட்டிப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்காவிற்கு உதிக்க, அதன் பார்வை நிலவிற்கு சென்றது.
சோவியத் ஒன்றியம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நிலவு வெடித்து சிதறினால், அது அந்த நாட்டிற்கு அமெரிக்கா மீது பயம் ஏற்படும், முழு உலகுமே அமெரிக்காவிற்கு அடிபணியும் என்ற காரணத்திற்காக உருவாக்கப்பட்டதே Project A119 எனும் நிலவை தகர்க்கும் திட்டம்.
எனினும் பூமிக்கு ஏற்படும் ஆபத்தை கருத்திற் கொண்டு அமெரிக்க இராணுவம் செய்த இழுபறி காரணமாக குறித்த திட்டமானது கைவிடப்பட்டது. இல்லாவிடின் இப்போது நிலவு இருக்காது என்பதே உண்மை. ஆனாலும் இந்தத் திட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதா என்பது இன்றும் சந்தேகம் தான்.
இந்த திட்டத்தின் தலைவராக இருந்த நாசாவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் மற்றும் இயற்பியல் துறை வல்லுனர் லியோனார்ட் ரெய்பெல் முலமாகவே இது உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது.
ஆனாலும் இது வரை இந்த சதி தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பற்றி உலகிற்கு வெளிப்படுத்தப்பட வில்லை மறைக்கப்பட்டு விட்டது.
இதேவேளை அதே போன்ற தொரு நிலை மீண்டும் ஏற்படுமா? என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதற்கு காரணம் நிலவில் முகாம் ஒன்றை நிர்மாணித்து அதன் உரிமை உறுதிப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதனை நிச்சயமாக அமெரிக்கா ஒத்துக்கொள்ளாது என்பதும் ஓரளவிற்கு உண்மையே.
காரணம் இன்று வரை அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கும் இடையில் பனிப்போர் இருந்து வருகின்றது. அதே போன்று உலகில் எதிலும் முன்னிலையாக திகழ வேண்டும் என எண்ணும் அமெரிக்கா ரஷ்யாவின் இந்த திட்டத்திற்கு மட்டும் இலகுவில் அனுமதிக்குமா? அமெரிக்கா இதற்கு என்ன பதிலை கொடுக்கப் போகின்றது என்பது இது வரை மர்மம்.
ஏற்கனவே செயற்கோளை வெற்றிகரமாக ஏவியதற்காக நிலவை அழிக்க திட்டம் தீட்டிய அமெரிக்கா இப்போது என்ன செய்யப்போகின்றது? அதே சமயம் சீனாவும் ஒரு பக்கம் விண்வெளி ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.
அடுத்த உலக யுத்தம் விண்வெளி மூலமாக இடம் பெறும் எனவும் கருத்துகள் வெளி வருகின்றன அதற்கான அத்திவாரமா இந்த திட்டங்களும் என்ற அச்ச நிலையும் இருக்கத்தான் செய்கின்றது.