நிறம் மாறும் நீச்சல் தடாகம்: காரணம் தெரியாது தவிக்கும் ஒலிம்பிக் நிர்வாகம்
தற்போது பிரேசிலின் ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் வெகு விமரிசையாக இடம்பெற்று வருகின்றது.
உலக விளையாட்டு ரசிகர்கள் அனைவரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள இப் போட்டிகளில் எல்லோரையும் வியக்க வைக்கும் மற்றுமொரு சம்பவம் இடம்பெறுகின்றது.
அதாவது நீச்சல் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட நீச்சல் தடாகங்களுள் ஒன்று இரவு நேரம் ஆகும்போது பச்சை நிறத்திற்கு மாறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த நீச்சல் தடாகங்கள் மென் நீல நிறத்திலேயே எப்போதும் தோற்றமளிக்கும்.
ஆனால் வழமைக்கு மாறான இந்த நிறமாற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் இந்த நிறமாற்றத்திற்கான காரணத்தை ஒலிம்பிக் போட்டி நிர்வாகம் அறிய முற்பட்ட போதிலும் இதுவரை அது சாத்தியமாகவில்லை.
இதேவேளை குறித்த நீச்சல் தடாகத்திற்கு சில மீற்றர்கள் அருகாமையில் இருக்கும் மற்றுமொரு நீச்சல் தடாகம் எவ்விதமான நிற மாற்றமும் இன்றி மென் நீல நிறத்திலேயே காணப்படுகின்றது.
இப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காண முடியவில்லை என குறித்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.