நிவித்திகல கல்வி வலயத்துக்கு உட்பட்ட சில பாடசாலைகளுக்கு நாளை (7) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத, அயகம ஆகிய கல்விப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (7) வெள்ளிக்கிழமை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் காலநிலையை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் மாகாண கல்விச் செயலாளரினால் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.