நாடு முழுவதும் நாளை (08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயு சிலின்டர்களையும் நாளைய தினம் விநியோகிக்கப்போவதில்லையென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு பொதுமக்கள் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.