நாற்பது ஆண்டுகளின் பின் எட்மண்ட் நகரை தாக்கிய பெருவெள்ளம்
வடக்கு மற்றும் கிழக்கு எட்மண்டன் பகுதியில் பெய்த கடும் மழையினால் சுமார் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு முதல் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த எச்சரிக்கை இன்று காலை மீளப் பெறப்பட்டுள்ளது.
எட்மண்டன் நகரின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்தும் வெள்ள நீரால் மூழ்கி காணப்படுகின்ற போதிலும், அதனாலான பாதிப்பு குறைவாகவே காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பன வெள்ள நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும், வைத்தியசாலைகள் போன்ற முக்கிய இடங்கள் பாதுகாப்பாகவும், மக்கள் பாவனைக்கு ஏற்றவகையிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்மண்டில் சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இவ்வாறான பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, இன்று 50 முதல் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என கனடா சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.