கிரியுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்மல – தங்கொடுவ பாதையிலுள்ள அதுருவல சந்தியில் நேற்று இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிரியுள்ள நோக்கிச் செல்லும் லொறியொன்று அதே திசையை நோக்கிச் செல்லும் இன்னுமொரு லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போதே எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளில் பின்னாசனத்தில் பயணித்த 80 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று (04) முன்னெடுக்கப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளை கிரியுள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.