நான் கொஞ்சம் லூசு – சினிமா வாழ்க்கை பற்றி காஜல் அகர்வாலின் வெளிப்படையான பேச்சு
காஜல் அகர்வால் அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இது தவிர தனுஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சினிமா பற்றி காஜல் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் 22 வயதில் நடிக்க வந்தேன். எனக்கு எந்த காட்பாதரும் இல்லை. நான் கஷ்டப்பட்டு முன்னேறினேன். பல தவறுகள் செய்தேன், எனக்கு இஷ்டமில்லாத படங்களிலும் நடித்தேன். அதன் பிறகே முடியாது என்று கூற கற்றுக் கொண்டேன்.
நான் கொஞ்சம் லூசு. ரொம்ப தெளிவாக இருந்தால் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடியாது. நான் முன்னேறியதற்கு ஒழுக்கமும் காரணம். நான் ஒரு ஸ்டார் என்பதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. என்று கூறியுள்ளார்