நான் அல்லாவுக்காக இறக்கிறேன்: விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் இறுதி வார்த்தைகள்
பிரான்ஸ் நாட்டில் உள்ள விமானநிலையத்தில் மர்மநபர் ஒருவர் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரின் துப்பாக்கியை பிடுங்க முயற்ச்சி செய்ததால், அருகில் இருந்த காவலர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ்சில் உள்ள Orly விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த நபர், அங்கிருந்த காவலாளியின் துப்பாக்கியை பிடுங்கி சுடுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த இரு காவலர்கள், பயணிகளின் பாதுகாப்புக்காக அவரை சுட்டுத் தள்ளினர். இதனால் அவர் அந்த இடத்திலே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தால் பொலிசார் அங்கிருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். சில விமானங்களும் மாற்று விமானநிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட முயற்சி செய்த நபரின் பெயர் Belgacem(39) இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர் எந்த காரணத்திற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்ற தகவல் சரிவரத் தெரியவில்லை என்றும் இதனால் இதை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு காரணம் ஒரு நபர் மட்டும் தான் என்றும் அதுமட்டுமின்றி பயணிகளின் பாதுகாப்பு காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து Belgacemஇன் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் வீடு Garges-les-Gonesse பகுதியில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் விமானநிலையத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அனைவரும் பாதுகாப்புடனே வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் இறப்பதற்கு முன் தான் அல்லாவுக்காக இறக்கிறேன் என்று இறுதியில் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.