எங்களை திருடர்களை என கூறிய நல்லாட்சியாளர்களின் திருட்டுகள் தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ,
தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க நேற்று கைதுசெய்யப்பட்டார்.
அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேன போட்டியிட்ட கட்சியின் தலைவர், ரவி கருநாயக்கவே அவரை லிற்றோ கேஸ் நிறுவனத்திற்கு தலைவராக நியமித்தார். இவர்கள் அனைவரும் கூட்டுக்கணவாளிகள்.