மீடூ சர்ச்சையில் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த விவ காரம் விஸ்வரூபமெடுத்தது. குறிப்பாக, டப்பிங் யூனியன் தலைவரான நடிகர் ராதாரவி அவர் சந்தா கட்ட வில்லை என்று அவரை யூனியனில் இருந்தே நீக்கினார். அதையடுத்து சின்மயி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து அவரது நீக்கம் தடை செய்யப்பட்டது.
இப்படியான நிலையில், நேற்று இரவு சென்னையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயாதான் நடிப்பார். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது.
பார்த்தவுடன் கும்பிடுவது போல இருப்பவர்களும், பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் ரசிகர்கள் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று ராதாரவி பேசினார்.
ஆனால் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியதை அடுத்து, ராதாரவியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. குறிப்பாக, பாடகி சின்மயி, ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலை தளத்தில் பதிவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.