நந்திக்கடல் வெளி தரைப்படை இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது




முல்லைதீவு பரந்தன் A35 பிரதான வீதி அருகே நந்திக்கடல் கிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த தரைப்படையினர் எவ்வித அறிவித்தலுமின்றி அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
வட்டுவாகல் பாலத்தின் அருகே அமைந்துள்ள சிறிய இராணுவ முகாதைத்தவிர நந்திக்கடல் தரைப்பக்கம் இரட்டைவாய்க்கால் வரை குறைந்தது 8 சதுரகிலோ மீற்றர் தூரம் வரை இராணுவ முகாம்கள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 கிலோமீற்றர் நந்திக்கடல் மேற்குப் பகுதியை இராணுவத்தினர் விடுவித்த நிலையில் அங்குள்ள விவசாயிகள் வயல் மற்றும் காய்கரித்தோட்டங்கள் அமைத்துப் பயனடைகின்றனர்.
எனினும் A35 வீதிக்கு மறுபக்கம் உள்ள 657 ஏக்கர் பொதுமக்கள் காணிகளில் மிகவும் உறுதியாக இலங்கை கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.