நத்தார் தினத்தில் சிறுவனிற்கு பரிசாக கிடைத்த உயிர்!! நம்புவீர்களா….
கிர தொம்ஸன் என்னும் இந்த 15 வயதுச் சிறுவன் பல மாதங்களாக உயிருக்கு போராடி வந்தான். படுத்த படுக்கையில் கோமா நிலையில் இருந்த இச்சிறுவனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் சரியான நுரையீரல் ஒன்று தானமாக கிடைக்கும் வரை அவனுக்கு செயற்க்கை சுவாசம் கொடுத்து மருத்துவர்கள் உறங்கு நிலையில் வைத்திருந்தார்கள்.
கிருஸ்மஸ் தினம் நெருங்கி வரும் வேளையில், மூளைச்சாவடைந்து இறந்து போன ஒரு மனிதரின் நுரையீரல் இச்சிறுவனுக்கு பொருந்தும் என்று கண்டுபிடித்த வைத்தியர்கள். உடனே அதனை வரவளைத்து உயிர் காக்கும் பாரிய சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார்கள்.
இதனூடாக பெறப்பட்ட நுரையீரல் அச்சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. சுமார் 2 தினங்களில் எல்லாம் அவன் சற்று குணமடைந்து எழுந்து உட்கார ஆரம்பித்துள்ளான்.
கிருஸ்மஸ் தினத்தில் பலருக்கு பல பரிசுகள் கிடைக்கும். ஆனால் எனக்கு நுரையீரலே பரிசாக கிடைத்துள்ளது என்று அவன் கூறியுள்ளான். தன் உயிர்காத்த கொடையாளிக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளான்.