சீனாவில் நான்கு நாய்கள் பரபரப்பான சாலையில் நண்பனுக்காக நின்று கொண்டிருந்தத சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சீனாவின் Lanzhou பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் நாய்கள் நடத்திய பாசப்போராட்டம் தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருப்பது நெஞ்சை உருக வைத்துள்ளது.
குறித்த வீடியோவில், நாய் ஒன்று சாலையில் இறந்து கிடந்துள்ளது. இதைக் கண்ட நான்கு நாய்கள் இறந்தது தெரியாமல், இறந்த நாயின் அருகே சென்று அதுக்கு ஒரு பாதுகாப்பாக நிற்கின்றனர்.
அருகில் யார் வந்தாலும், அவர்களை கடிக்க முற்படுகின்றன. அங்கு கார்கள் தொடர்ந்து வந்து சென்று கொண்டிருந்தாலும், கார்கள் தான் விலகிச் செல்கின்றதே தவிர, நாய்கள் அந்த இடத்திலே நிற்கின்றன.
இதைக் கண்ட இணையவாசிகள், மனிதர்கள் இந்த நாய்கள் போன்று இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.