நடுவானில் 10 வயது சிறுமிக்கு திடீர் மாரடைப்பு!! அடுத்தடுத்து நிகழ்ந்த விபரீதம.
கனடாவில் இருந்து பிரித்தானிய நாட்டிற்கு பயணித்த 10 வயது சிறுமிக்கு நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள ரொறன்றோ நகரில் இருந்து 10 வயது சிறுமி ஒருவர் Air Canada flight AC-868 விமானத்தில் நேற்று காலை 8.40 மணியளவில் புறப்பட்டுள்ளார்.
பிரித்தானிய தலைநகரமான லண்டனுக்கு விமானம் சென்றபோது சிறுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமி மூர்ச்சையாகி கிடப்பதை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஐயர்லாந்து நாட்டிற்கு திசை திருப்பியுள்ளனர்.
ஐயர்லாந்தில் உள்ள Shannon விமானத்தில் மாலை 7.40 மணியளவில் விமானம் தரையிறங்கியுள்ளது. பின்னர், அங்குள்ள Limerick மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியை இறக்கிய விமானம் தாமதமாக புறப்பட்டு லண்டன் நகருக்கு இரவு 9.20 மணிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில், ஐயர்லாந்து மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் அவர் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமி வயதுடைய சகோதரிகள் மூவரும் அப்போது அவருடன் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
நடுவானில் சிறுமிக்கு எதனால் மாரடைப்பு ஏற்பட்டது என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த முடிவை தொடர்ந்து கனடா நாட்டு விமான நிறுவனம் சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/76999.html#sthash.faefQoD7.dpuf