நடுவானில் வெடித்துச் சிதறிய வேண்டிய 2 விமானங்கள்: கட்டுப்பாட்டு அதிகாரி செய்த சாமர்த்திய செயல்
அயர்லாந்தில் இரண்டு விமானங்கள் மோதி வெடித்துச் சிதறவேண்டிய நிலையில், கட்டுப்பாட்டு அதிகாரியின் சாமார்த்திய செயலால் அவ்விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
A320 என்ற விமானம் இத்தாலியின் மிலன் நகரில் இருந்து புறப்பட்டு, அயர்லாந்தில் உள்ள Dublin விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு வந்துள்ளது, அதே போன்று இத்தாலியில் இருந்து Ryanair Boeing 737 என்ற விமானம் இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து புறப்பட்டு அதே விமான நிலையத்தில் தரையிரங்க வந்துள்ளது.
ஆனால் இந்த இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் தரையிரங்க முற்பட்டதால், மிகப் பெரிய விபத்து ஏற்பட காத்திருந்தது.
ஆனால் இதைக் கண்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உடனடியாக இரண்டு விமானங்களில் ஒரு விமானஓட்டிக்கு தொடர்பு கொண்டு உடனடியாக உங்கள் விமானத்தை நிறுத்தி இடது புறமாக திருப்பும் படி கூறியுள்ளார்.
700 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்த இரு விமாங்களை மோதவிடமால் எந்த ஒரு பதட்ட மின்றி, அமைதியாக மற்றும் சாமர்த்தியாமாக கையாண்டு தரையிரக்கிய கட்டுப்பாட்டு அதிகாரியை, அங்கிருந்த உயர் அதிகாரிகள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து விமானத்தை ஓட்டி வந்த விமானி கூறுகையில், தாங்கள் இத்தாலியின் Venice Treviso விமான நிலையத்தில் இருந்து Dublin க்கு தரையிரங்குவதற்கு தயாராக இருந்தோம். ஆனால் ATC அதிகாரிகளின் உத்தரவுப்படி சற்று சுற்றிச் செல்லும்படி கூறினர். அதனால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த இருவிமானங்களை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய கட்டுப்பாட்டு அதிகாரி விமானிகளிடம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.