நடுவானில் ராக்கெட்டை தாக்கி அழித்த மர்மப்பொருள் – சிக்கிய ஆதாரத்தில் பறக்கும் தட்டு..!
அண்மையில் பிரான்ஸ் அரசு பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் ராக்கெட் ஒன்றினை ஏவியது. இருந்த போதும் அது இடை நடுவில் வெடித்து சிதறி ஏமாற்றம் தந்தது.
குறித்த சம்பவத்தை விபத்தாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியது, இருந்தபோதும் ராக்கெட் ஒன்று இப்படி இடை நடுவில் பஸ்பமாகிப் போவதற்கு வாய்ப்புகள் குறைவு என்ற சந்தேகம் காணப்பட்டது.
இப்போது இது வேற்றுக்கிரகவாசிகள் மூலமாக நடத்தப்பட்ட தாக்குதல் என ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் புது காணொளி ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நவீன கால விஞ்ஞான வளர்ச்சியில் அடிப்படையில் முறையாக பரிசோதிக்காமல் ராக்கெட் ஒன்றினை விண்ணுக்கு ஏவமாட்டார்கள். அதனையும் தாண்டி குறித்த ராக்கெட் வெடிக்கும் முன்னர் படிப்படியாக சாம்பலாக ஆரம்பித்து பின்னரே வெடித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சந்தேகத்தினாலேயே இந்த விபத்து தொடர்பில் மறைமுகமான ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருந்தனர். அடுத்து இது விபத்து அல்ல என்றும் ஓர் மர்மப் பொருள் மூலம் தாக்கப்பட்டதாலேயே இந்த வெடிப்புக்கு காரணம் எனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே பேஸ்புக்கின் ராக்கட் ஒன்றும் இடைநடுவில் வெடித்துச் சிதறியது இதற்கும் இவ்வாறானதொரு நிலையே ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.
வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வு செய்து வருகின்றவர்கள் இந்த விபத்துகளுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளே எனவும் பறக்கும் தட்டு மூலமாகவே தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது என அடித்துக் கூறுகின்றனர்.
ஆனபோதும் இவை அமெரிக்கா இரகசியமாக வைத்திருக்கும் ஏரியா 51 ஆயுத முகாம் மூலமாக நடத்தப்படும் மர்ம நாடகங்கள் எனவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
அதன்படி அமெரிக்காவின் ஏரியா 51 இல் வேற்றுக்கிரகவாசிகளின் தொழில் நுட்பம் இருப்பதாகவும் அவர்கள் மூலமாகவே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுகின்றன எனவும் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எப்படியானாலும் இவ்வாறான சம்பவங்கள் காரணமாக வியப்படைந்துள்ள விஞ்ஞானிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எப்படி எடுக்கப் போகின்றார்கள் என்பது இன்னமும் மர்மமே.