நடிகர் மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன் நெருக்கமான நண்பர்கள். மோகன்லால் நடித்த பல படங்களை இயக்கி உள்ளார் பிரியதர்ஷன். இருவரது குடும்பமும் நீண்ட காலமாக நட்பாக பழகி வருகிறது. அந்த வகையில் மோகன்லால் மகன் பிரணவ், பிரியதர்ஷன் மகள் கல்யாணி ஆகியோர் சிறுவயதிலிருந்தே பழகி வருகின்றனர். பிரணவுக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோதும் ஏற்காமல் தவிர்த்து வருகிறார். இயக்குனர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை என்று கூறப்படுகிறது.
திரையுலகிற்குள் இன்னும் நுழையாவிட்டாலும் இப்போதே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிரணவ், கல்யாணி இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி படம் இணைய தளத்தில் வெளியானது. இது பல்வேறு கிசுகிசுக்களை கிளப்பி உள்ளது. இருவருமே நட்பாக மட்டுமே பழகுகிறார்களா? அதையும் கடந்து இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.