நடிகர் சங்கம் பணத்தில் கார்த்தி கம்பனிக்கு பணப்பரிமாற்றம் – ராதாரவி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய பொதுக்குழுவில் ஒருமனதாக சரத்குமார் மற்றும் ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளோம் என்று அறிவித்தனர். இந்த விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து விஷால் மற்றும் கார்த்திக்கு ராதிகா பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் இது பற்றி ராதாரவி ஒரு பேட்டியில் பேசுகையில், எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சம்மந்தப்பட்டவரை கூப்பிட்டு பேசியிருக்க வேண்டும். இந்த நடிகர் சங்கத்தில் நான் அனுபவம் நிறைந்த ஒரு கலைஞன். எங்கள் மேல் குற்றம் சொல்லும் இவர்கள் முதலில் கார்த்தி எதற்கு நடிகர் சங்கத்திலிருந்து ரூ. 10 லட்சம் எடுத்து காஷ்மோரா எடுத்த அவரது கம்பெனிக்கு கொடுத்தார்.
இதை பற்றி நான் கேட்டால் கார்த்தி ஒரு வார இதழில் ராதாரவிக்கு பதில் சொல்ல முடியாது என்று சொல்லி ஒரு விஷயத்தை சொல்றாரு, முதலில் நான் நடிகர் சங்கத்துத்துக்கு பணம் கொடுத்தேன், அதை இப்போ எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். அது எப்படிங்க ஒரு டிரஸ்டிலிருந்து பணம் பரிமாற்றம் செய்வது சரியாகும், டிரஸ்ட்ல இதெல்லாம் நடக்கவே கூடாது.
ஆகமொத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் சுயரூபம் வெளியே வருகிறது. எங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சட்டரீதியாக நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று ராதாரவி கூறினார்