வானிலை தொடர்பான செயலிழப்புக்களினால் ஆயிரக்கணக்கான மக்கள் நகரின் வடக்கில் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
தற்சமயம் ஒன்ராறியோவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகள் பூராகவும் 322 வெவ்வேறுபட்ட செயலிழப்புக்களை கவனித்து வருவதாக ரொறென்ரோ ஹைட்ரோ தெரிவிக்கின்றது. இத்தடங்கல் காரணமாக 39,000ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்-நியு மார்க்கெட் பகுதியில் 5,600 வாடிக்கையாளர்கள் ஒரில்லாவில் 5,400 ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் அலிஸ்ரனில் 2,000ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பலத்த காற்று மற்றும் சில பகுதிகளில் ஈரமான பனி காரணமாக இத்தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஹைட்ரோ வண் கூறுகின்றது. அடுத்த சில மணி நேரங்கள் வரை சில பகுதிகளில் பனிப்பொழிவு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் தடங்கல்களை சரி செய்ய குழுவினர் முயன்று வருகின்றனர். ஆனால் பலதரப்பட்ட செயலிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதால் மறுசீரமைப்பு எப்போது சரியாகும் என தெரிவிக்க முடியாதெனவும் ஹைட்ரோ தெரிவிக்கின்றது.