ஒட்டாவா–சிறு குழந்தைகள் மற்றும் பிள்ளைகளிற்கான ஒரு வகை தோல் கிரீம் குறித்து கனடா சுகாதார பிரிவு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனால் தீவிர சுகாதார அபாயங்கள் ஏற்படலாம் என்பதே குறிப்பிட்ட எச்சரிக்கையாகும்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எக்சிமா மற்றும் தடிப்பு தோல் அழற்சி-{ eczema and psoriasis}-போன்றனவற்றின் இயற்கை சிகிச்சைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட PureCare Herbal Creamy-ல்(clobetasol propionate) ) ஒரு வகை ஊக்கியம் மற்றும் phenoxylethanol போன்றவை அடங்கியுள்ளதாகவும் இவை லேபலில் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் மத்திய நிறுவனம் கூறுகின்றது.
இவை எரிச்சல், உடல் வறட்சி அல்லது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் என கனடா சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த கிரீம் ஆன்லைனில் www.purecareskin.com மற்றும் ஒரு தனிப்பட்ட விநியோக நெட்வேக் மூலமாகவும் விற்கப்பட்டுள்ளது.
இத்தயாரிப்பு இரண்டு வெவ்வேறு லேபல்களுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போதய லேபல் குறிப்பிட்ட தயாரிப்பு மிகவும் வறண்ட சருமத்திற்கானதெனவும் முன்னய லேபலில் எக்சீமா, தடிப்பு தோல் அழற்சி & உலர் தோலிற்கான மூலிகை கிரீம் என்ற லேபலுடன் காணப்படுகின்றன.
நுகர்வோர் இதனை உபயோகிப்பதை நிறுத்துமாறும் பாவித்திருந்தால் ஒரு சுகாதார நிபுணருடன் தொடர்பு கொள்ளுமாறும் கனடா சுகாதார பிரிவினர் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
Clobetasol propionate அதிதீவிர வீரியம் கொண்ட பரிந்துரைக்கப்பட்ட ஒரு மருந்தாகும். அழற்சி நிலைமைகளிற்கு உபயோகிப்பது.
மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே உபயோகிக்கப்படுவதென கூறப்படுகின்றது. தோல் எரிச்சல், பலவீனம் மற்றும் சீரற்ற நிலைமை ஏற்படுத்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PureCare Herbal Cream Ltd. இத்தயாரிப்பை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டதாக கனடா சுகாதார பிரிவு கூறுகின்றது. தயாரிப்புக்களை சந்தையிலிருந்து மீள அழைக்குமாறு கம்பனியை கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.