தொழிற்படாத நிலையில் உடலில் காணப்படும் HIV கண்டுபிடிப்பு!
எயிட்ஸ் நோயை தோற்றுவிக்கக்கூடிய HIV ஆனது பல ஆண்டுகள் வரை காத்திருந்து நோய்த்தாக்கத்தை உண்டாக்கவல்லது.
இந்த வைரஸினை முற்றாக அழிப்பது தொடர்பாக இதுவரை எந்தவிதமான சிகிச்சை முறையும் அறிமுகம் செய்யப்படாத நிலையில் தற்போது மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மனித உடலில் செயலற்ற நிலையிலும் HIV தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இவ்வகை வைரஸினை கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சி கடந்த 10 வருடங்களாக இடம்பெற்று வந்த நிலையிலேயே தற்போது சாத்தியமாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இதன் பாதிப்புக்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை உலகம் முழுவதும் 36.7 மில்லியன் மக்கள் HIV தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், இவர்களில் 17 மில்லியன் வரையானவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.