வீதி அருகில் உள்ள தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டி மோசடியில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட 4 பேர், அநுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஏ-9 பிரதான வீதியில் – மிஹிந்தலை மற்றும் ரம்பேவ பகுதிகளுக்கு இடையே நீண்ட நாட்களாக இவ்வாறு தொலைபேசி இணைப்பு வயர்களை வெட்டியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில், போதைப் பொருளை பயன்படுத்துவதற்கு தேவையான பணத்தை ஈட்டும் நோக்கில் இவர்கள் அந்த மோடியை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.