தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கைகலப்பு! ஆவேசமாக ஆணை தாக்கிய குஷ்பு
சொல்வதெல்லாம் உண்மை போல சூரிய தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு ‘நிஜங்கள்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். குடும்ப பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்யும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த நாகராஜன்-முத்துமாரி தம்பதியரின் வழக்கு தான் இன்று டிவியில் ஹைலைட்.
நிகழ்ச்சி தொடங்கியதும் இரு தரப்பிற்கும் வாய் சண்டை முற்றி கைசண்டை தொடங்கியது. கெட்ட வார்த்தைகள் சரமாரியாக பேச தொடங்கியதும் டென்ஷனான குஷ்பு நாகராஜனின் சட்டையை பிடித்து கீழே தள்ளினார்.
“என் முன்னாடியே இப்படி கெட்ட வார்த்தை பேசலாமா? எனக்கு என்ன மரியாதை இருக்கு?” என கேட்ட பிறகு நாகராஜன் மன்னிப்பு கோரினார்.
“இருவரும் ஒரு வருடம் பிரிந்து இருங்கள்” என இறுதி தீர்ப்பளித்தார் நம்ம நாட்டாமை குஷ்பு.