தொடர்மாடிக்கட்டிடமொன்றில் 600 எலிகளை வளர்த்த பெண்?
கனடா- தண்ட பே பகுதியில் ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு பிரிவில் இருந்து வியாழக்கிழமை 600 எலிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட தொடர்மாடிக்கட்டிடத்தில் வசிக்கும் பெண் ஒருவர் எண்ணிக்கையற்ற கொறித்துண்ணிகளை இனப் பெருக்கம் செய்வதாக தீயணைப்பு பிரிவினருக்கும் நகரின் சுகாதாரப்பிரிவினருக்கும் கிடைத்த முறைப்பாடு கிடைத்துள்ளது.
இறுதியில் குறிப்பிட்ட பெண் எலிகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அனைத்து எலிகளையும் ஒரே இடத்திற்கு எடுத்து செல்ல முடியாத காரணத்தினால் தண்ட பே மனித நேய சங்கம் எலிகளை பீற்றபொறோ, கவாத்ரா லேக்ஸ் மற்றும் குயின்ரே மற்றும் சில மனிதநேய சங்கங்களிற்கு பிரித்து அனுப்பியுள்ளனர்.
ரொறொன்ரோ மனித நேய சங்கம் 30 வளர்ப்பு பிராணிகளை ஏற்றுள்ளனர்.
இவைகளை தத்து கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.