எட்மன்டனில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்கு வெளியே இறந்து கிடக்க காணப்பட்ட சிறுவனை அவனது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சிறுவனின் பெயர் அந்தோனி ஜோசப் றெய்னி.இவனது தாயார் பழங்குடியை சேர்ந்தவர்.
இம்மரணம் சம்பந்தமாக ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் iது செய்யப்பட்டுள்ளனர்.
சமுதாயத்தின் பிரதிபலிப்பு மற்றும் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற துப்புக்கள் துரித கைதிற்கு வழிவகுத்ததென கூறப்படுகின்றது.
அதிகார பூர்வமான குற்றச்சாட்டுக்கள் இது வரை பதியப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். புலன் விசாரனை தொடர்கின்றது.
கைதானவர்களிற்கும் சிறு குழந்தைக்கும் இடையிலான உறவு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அந்தனி 19-மாதங்களே ஆன குழந்தை என அவனது தாயார் டெலிசி றெயினி தெரிவித்தார்.
தாய் நேர்சிங் பாடசாலைக்கு செல்லும்போது அன்ரனி அவனது தந்தையுடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அல்பேர்ட்டா பூராகவும் இருந்து அன்ரனியின் மரணச்சடங்கில் கலந்து கொள்ள ஏராளமான மக்கள் கலந்து கொள்ள திட்ட மிட்டுள்ளதாக அறியப்படுகின்றது. பிரேத பரிசோதனை திங்கள்கிழமை காலை 9.30மணிக்கு இடம்பெறுகின்றது.