அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில், துப்பாக்கி களைக் கையில் ஏந்தி, குண்டுகளைக் கிரீடமாக அணிந்துகொண்டு பிரார்த் தனை நடைபெற்றிருக்கிறது.
புளோரிடாவில் உள்ள பள்ளியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அமெரிக்கர்கள் மீளவில்லை. அதற்குள் அமெரிக்கத் தேவாலயம் ஒன்றில், எல்லோரும் துப்பாக்கி களைக் கையில் பிடித்தபடி பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.
‘அமைதி மற்றும் ஒற்றுமைக்கான தேவாலயம்’ என்ற பெயரை வைத்துக்கொண்டு, பாதிரியார் சியான் மூன், துப்பாக்கி இன்றி எவரும் இந்தப் பிரார்த்தனைக்கு வரக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்! திருமண ஆடைகளை அணிந்துகொண்டு, தலையில் கிரீடமும் கையில் துப்பாக்கி யையும் பிடித்துக்கொண்டு இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஏராளமான ஜோடிகள் கலந்துகொண்டனர். இதைக் கேள்விப்பட்டவுடன் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் தேவாலய வாயிலில் கூடி, எதிர்ப்புக் கோசங்களை முழங்கினார்கள்.
‘‘சாத்தானை விரட்டியடிக்கவே இந்தத் துப்பாக்கிப் பிரார்த்தனை. ஒவ்வொருவருக்கும் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கினோம். இதைக் கொடுத்து, கடையில் இருந்து துப்பாக்கிகளை வாங்கிக்கொண்டனர். பார்ப்பதற்கு பயங்கரமான துப்பாக்கிகளாகத் தெரிந்தாலும், இவை அனைத்தும் தோட்டாக்கள் அற்ற துப்பாக்கிகள். அதைப் பரிசோதித்த பிறகே தேவாலயத்துக்குள் அனுமதித்தோம். அதனால் ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்கிறது தேவாலயத் தரப்பு.‘‘இவ்வளவு பேர் ஓரிடத்தில் மிகப் பெரிய துப்பாக்கிகளுடன் இருப்பதைப் பார்க்கும்போது, அது சிலருக்கு ஆர்வத்தைத் தூண்டலாம் என்பதைக்கூடவா இவர்கள் யாரும் உணரவில்லை? அன்பே உருவான இறைவனை வழிபடும் தேவாலயத்துக்குள் எதற்கு இந்தத் துப்பாக்கி?’’ என்று கேட்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.