இலங்கைத் தீவில் தேர்தல் வந்தால் பல பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்படுவதைக் கண்டுள்ளோம். தேர்தல் முடிந்த மறுகணமே அவை காற்றில் பறக்கவிடப்படும். இதுவே கனடா தேசத்திலும் நீள்வதுதான் எனக்கு வேதனை.
கனேடிய தேசத்தில் தேர்தல் இடம்பெறும் சூழல் வரவும் பலருக்கும் ஈழத் தமிழ் மக்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளார்கள். இனி ஈழம் தருவோம், நீதி தருவோம் என்று எல்லாம் வாக்குறுதிகள் அள்ளிக் குவிக்கப்படும்.
இலங்கையில் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று சொல்லித்தான் கடந்த காலத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் செய்தது. அதுவே அவர்களின் அரசியலுமானது.
ஆனால் இன்று அதே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல், அதை வைத்தே கைதுகளை அரங்கேற்றுவதுடன் விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளதாக அரசு கூறுகிறது.
ஶ்ரீலங்கா அரசின் இந்த மோசடி முகத்திற்கும் கனேடிய தேசத்தில் அரசியல் மோசடி செய்பவர்களுக்கும் என்னதான் வேறுபாடு இருக்கிறது. ஆனால் அரசியல் பிழைத்தால் அறம் எமனாகும் என்பதை மறவாதீர்கள்.
இது அரசியல்வாதிகளுக்கும் எவருக்கும் பொருந்தும்.
உண்மையான வழியில் தூய்மையான அரசியல்தான் ஆரோக்கியமானது.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை