இலண்டனில் மிகப் பிரசித்தி பெற்ற தேம்ஸ் நதியில், 72 அடி தூரத்தை மோட்டார் சைக்கிளில் பாய்ந்து, மோட்டார் சைக்கிள் வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் தெற்கில் அமைந்துள்ள தேம்ஸ் நதி, சுற்றுலாத்துறையினரைக் கவரும் மையமாக விளங்குகிறது. இந்த நதியின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு, டிராவிஸ் பெஸ்ட்ரானா என்ற வீரா், பாய்ந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் சாகச வீரரான டிராவிஸின் இந்தச் சாதனை குறித்து இங்கிலாந்து ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.
நதியின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பாயும் இவரது சாகசத்தை பலரும் நேரில் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனர்.