தமிழர் தாயகப் பகுதியில் தேசிய தலைவரின் பிறந்த நாளினை கொண்டாட பல்வேறு தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் தேசிய கொடி பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
எனினும் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று காலை சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக தாயக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேசிய தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள், தமிழர் தாயக மண்ணிலும், புலம்பெயர் தேசங்களிலும் நாளை கொண்டாடப்படவுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட ஆரம்பித்த பின்னர், தேசிய தலைவரின் பிறந்தநாள் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.
ஆயுதப் போர் தாயக மண்ணில் மௌனிக்கும் வரையில் பகிரங்கமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தாயக தேசத்தில், பாதுகாப்புத் தரப்பின் கண்ணில் மண்ணைத் தூவி இரகசியமான இடத்தில் கொண்டாடப்பட்டு வந்தது.
இந்தாண்டு, தாயக மண்ணிலும், புலம்பெயர் தேசங்களிலும் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.