ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற தேசிய அரசாங்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, பாராளுமன்றத்தின் அனுமதியுடன் தேசிய அரசாங்கத்தில் செயற்பட்டு வருகின்றோம். இந்த ஒப்பந்தத்துக்கு அமையவே இதுவரையில் இரு தரப்பும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.