ஸ்ரீலங்கா பொஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, வர்த்தகர் தம்மிக்க பெரேராவை அமைச்சரவை அமைச்சராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவி விலகும் பசில்
தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பசில் – விரட்டியடித்த ரணில்
நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் அரசியலில் பிரவேசித்து பொறுப்புகளை ஏற்கத் தயார் என ஒப்புக்கொண்டார்.
அதற்கமைய பசில் ராஜபக்ச பதவி விலகியவுடன் அவர் இடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை 21ஆவது அரசியல் திருத்த சட்டமூலம் விரையில் கொண்டு வரப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் பசில் ராஜபக்ச அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்த சட்டம் மூலம் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரணிலுடன் மோதலுக்கு சென்று பசில்
தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய பசில் – விரட்டியடித்த ரணில்
சில தினங்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பசில் ராஜபக்ச, 21ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
இதன்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சண்டித்தனங்களை ஜனாதிபதியான அண்ணனுடன் வைத்துக்கொள்ளுமாறு ரணில் திரும்பி அனுப்பியதாக தெரிய வருகிறது.