எந்த வேலையும் செய்யாமல் 3 மாதங்களுக்கு தூங்கினால் 16,000 யூரோக்கள்( இலங்கை மதிப்பில் 25 லட்சம்) சம்பளம் அளிக்கப்படும் என பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் படி, மைக்ரோகிராவிட்டி தொடர்பான ஆராய்ச்சிக்காக, ஒரு 3 மாதங்கள் தொடர்ந்து உறங்கியபடி இருக்க வேண்டும்.
அதுவும், விஞ்ஞானிகள் சொல்லும் இடத்தில் இதனைச் செய்ய வேண்டும். அதுவும், தொடர்ச்சியாக, 2 மாதங்களுக்கு உறங்கியபடியே இருக்க வேண்டும்.
இதன்போது, உங்களின் உடல் அசைவுகளில் ஏற்படும் மாற்றங்களை, விஞ்ஞானிகள் குழு கூர்ந்து கவனித்து, அதனை தங்களது ஆய்வுப் பணிகளுக்காக சேகரித்துக் கொள்வர்.
இந்த ஆய்வுக்கு, விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பாக, 20 முதல் 45 வயது வரையானவராகவும், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என, பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க, உலகம் முழுவதிலும் இருந்து தற்போது விண்ணப்பங்கள் குவிய தொடங்கியுள்ளது.