கூட்டம் அதிகமாக காணப்பட்ட வெள்ளிக்கிழமை நேரத்தில் சுரங்க ரயில் பாதை சேவை கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்பட்டது. ரயில் ஒன்றிற்குள் துர்நாற்றம் வீசும் குண்டு ஒன்றை வைத்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரால் இருவரை பொலிசார் தேடிவருகின்றனர்.
யங்-யுனிவேசிட்டி லைன் 1, சென்ட் ஜோர்ஜ் மற்றும் யூனியன் நிலையங்களிற்கிடையில் ஒரு மணித்தியாலங்கள் இடை நிறுத்தப்பட்டது.
ரயில் அழுகிய முட்டைகள் போன்று மணத்ததாக ஆரம்ப விசாரனைகள் தெரிவித்தன.
ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவின் அதிகாரி இந்த முழு சம்பவம் ஒரு “குறும்பு” என தெரிவித்தார்.துர்நாற்றம் வீசும் குண்டு என சாதாரணமாக தெரியப்படும் ஒரு கருவி எனவும் அவர் தெரிவித்தார்.
யாரோ இந்த துர்நாற்றம் வீசும் குண்டை செயல்படுத்தி ரயிலிற்குள் விசியதால் மியுசியம் நிலையம் வரை-பயணி ஒருவரால் உதைக்கப்படும் வரையிலும் உருண்டுள்ளது.
ஆனால் இது ‘வேடிக்கையானதல்ல” என ரொறொன்ரோ பொலிசார் கருதுகின்றனர். சென்.ஜோர்ஜ் நிலையத்தில் உள்ள வீடியோ கண்காணிப்பு நாடாக்களில் இருந்து இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
நடைபாதையில் நின்று ரயில் புறப்படுவதற்காக கதவுகள் மூடப்படும் முன்னர் ஏதோ ஒன்றை ரயிலிற்குள் வீசியதை கண்டுள்ளனர்.
இச்சம்பவத்தை ஒரு வேடிக்கை என பொலிசார் எண்ணவில்லை.
இவர்கள் குறும்பு செய்கைக்கான குற்றச்சாட்டை எதிர் நோக்குவர் என பொலிசார் தெரிவித்தனர்.
ஒருவருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட பிற்பகல் 4.30மணியளவில் சென்.ஜோர்ஜ் நிலையத்தில் நின்று இச்சம்பவத்தை பார்த்திருந்தால் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.