துருக்கி: ராணுவ வீரர்கள் மீது குர்திஷ் போராளிகள் ஆவேச தாக்குதல் – 5 பேர் பலி
துருக்கி நாட்டின் ஹக்காரி மாகாணத்தில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது குர்திஷ் போராளிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
துருக்கி: ராணுவ வீரர்கள் மீது குர்திஷ் போராளிகள் ஆவேச தாக்குதல் – 5 பேர் பலி
இஸ்தான்புல்:
துருக்கி நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களில் ஒன்றான குக்குர்க்காவின் எல்லைப்பகுதி அண்டை நாடுகளான ஈரான், ஈராக் ஆகிய எல்லைகளின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த எல்லைப்பகுதியில் நேற்று ராணுவ வீரர்கள் வாகன தணிக்கை மற்றும் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு வாகனத்தில் வந்த குர்திஸ்தான் போராளிகள் ராணுவ வீரர்கள்மீது அதிரடியாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.