துருக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் கனடியர் கைது
கனடா-ரொறொன்ரோ-கனடிய மனிதர் ஒருவர் துருக்கியில் யூலை 15ல் இடம்பெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதியின் தலைவர் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவரது குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.
அல்பேர்ட்ட குற்றச் சீர்திருத்த சேவையில் முஸ்லீம் மதகுருவாக பணிபுரிவரான தாவுத் ஹன்சி யூலை 13 விடுமுறையில் துருக்கி சென்றதாக கூறப்படுகின்றது.
ஹன்சியின் மனைவி கனடாவில் இருக்கும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு கணவர் கைது செய்யப்பட்டதாகவும் எதுவித தகவலும் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். துருக்கியில் ஆட்சிகவிழ்ப்பு முயற்சியில் ஹன்சிக்கும் தொடர்பு இருப்பதாக துருக்கிய ஊடகங்களில் பெயர் அடிபடுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் ஹன்சி கனடா மற்றும் துருக்கி நாடுகளின் இரட்டை குடிமகன் எனவும் பென்சில்வேனியாவை சேர்ந்தவரெனவும் அங்கு ஒரு விமர்சகர் மற்றும் துருக்கிய ஜனாதிபதி Recep Tayyip Erdogan ன் முன்னாள் கூட்டாளியுமான யு.எஸ்-சார்ந்த மதகுரு Fethullah Gulen பணிபுரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கனடிய இரட்டை குடிமகன் ஒருவர் துருக்கியில் கைதாகி இருப்பது சர்வதேச விவகாரங்கள் பிரிவினருக்கு தெரியும் எனவும் கனடிய தூதரக அதிகாரிகள் உதவி தேவைப்படும் பட்சத்தில் உதவ ஆயத்தமாக இருப்பதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.