துருக்கியில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். 46 பேர் காயமடைந்தனர்.
துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து மேற்குப் பகுதியிலுள்ள புர்சா நகருக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பலியாகினர். 46 பேர் காயமடைந்தனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். ‘
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
துருக்கியைப் பொறுத்தவரை அங்கு சாலை விபத்துகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. 2016-ல் மட்டும் துருக்கியில் சாலை விபத்தில் 7,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.