துருக்கியில் கார் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி, 219 பேர் காயம்



துருக்கியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 219க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Van என்ற நகரில் காவல் நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், 2 பொது மக்களும் பரிதாபமாக பலியானார்கள்.
மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த 20 பொலிஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், Elazig என்ற நகரில் பொலிஸ் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு காரணமாக அருகிலிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தாக்குதலால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.