துணை இயக்குனராக மாறிய நயன்தாரா?
தமிழ் சினிமாவின் No.1 ஹீரோயினாக இருப்பவர் நயன்தாரா. விக்ரமுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இருமுகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
அதில் பேசிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் “நயன்தாரா இந்த படத்தில் அதிக ஈடுபாடோடு பணியாற்றினார். ஷாட் முடிந்தவுடன் கேரவனுக்கு செல்லாமல், கிட்டத்தட்ட ஒரு துணை இயக்குனரை போல, வெளியேயே இருந்து வேலை செய்வார்”.
“ஹலேனா பாடலை, கடற்கரையில் படமாக்கியபோது.. அங்கு Sand Castle’யைகூட நயன்தாரா தான் கட்டிக்கொண்டிருந்தார்.இப்படி ஒரு ஹீரோயினை யாரும் பார்த்திருக்கவே முடியாது” என்றார் ஆனந்த் ஷங்கர்.
நயன்தாரா No.1 ஹீரோயினாக இருப்பதற்கு இதுவும் இரு காரணமோ?