தீவிரமயமாதலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் கனடா முன்னிலை பெறவேண்டும்
தீவிரமயமாதலை புரிந்துகொண்டு கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் உலக அளவில் கனடா முன்னிலை பெறவேண்டுமென கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரால்ஃப் குட்டேல், தெரிவித்துள்ளார்.
‘வன்முறைக்கு இட்டுச்செல்லும் தீவிரமயமாதலை தடுத்தல்’ என்ற தொனிப்பொருளில் மொன்றியலில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
ஒன்ராறியோ தீவிரவாத தாக்குதல் விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பின் தேவையை வலியுறுத்தியுள்ள அமைச்சர், தீவிரவாதத்தினால் ஈர்க்கப்பட்டு இவ்வாறான வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட முனைவோரை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் தற்போது அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே இவ்வாறான தீவிரமயமாதலை கட்டுப்படுத்தும் வகையில், சமூகங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான புதிய தேசிய அலுவலகம் ஒன்றினை அமைப்பது குறித்து மத்திய அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒன்ராறியோவில் தீவிரவாத தாக்குதல் ஒன்றினை மேற்கொள்ளவிருந்த தீவிரவாதி ஒருவர், பொலிஸாரின் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டதன் பின்னணியில் அவரது இந்த கருத்து பெரிதாக பார்க்கப்படுகின்றது.