தீப்பிழம்பாய் வெடித்த மூர்க்கத்தனமான வீதி நடவடிக்கை?
கனடா-மிசிசாகா நெடுஞ்சாலை 401-ல் வாகனம் ஒன்றிற்கும் மோட்டார் சைக்கிள் குழுவினர் ஒன்றிற்கும் இடையில் ஏற்பட்ட மூர்க்கத்தனமான நடவடிக்கை அக்கினிசூழை நிறைந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் நெடுஞ்சாலை 401-மேற்கு டிக்சி பாதையை அண்மிக்கையில் வியாழக்கிழமை இரவு 10மணியளவில் ஆரம்பித்தது.
மோட்டார் சைக்கிள்கள் குழு ஒன்று நெடுஞ்சாலை மேற்கு லைன்கள் அனைத்தையும் ஆக்கிரமித்து முன்சக்கரத்தை தரையில் இருந்து உயர்த்திய வண்ணம் சாகசம் புரிந்துள்ளனர் என ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் கெரி சிமித் கூறினார்.
கறுப்பு நிற வொக்ஸ்வகன் கொல்வ் வாகனத்தில் இருந்த மனிதர் ஒருவரும் பெண்ணும் இக்குழுவினரை நகர்ந்து செல்ல முயன்றுள்ளனர். இரண்டு குழுவினரிடையே பரிமாற்றம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். இச்செயல்பாட்டின் போது கார் சேதப்படுத்தப்பட்டது.
மோட்டார்சைக்கிள்காரர்களும் காரும் டிக்சி வீதியை விட்டு விலகி வாதாடி சண்டை போட்டனர். இச்சமயம் பெண் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
மனிதன் காரிற்குள் ஏறியுள்ளார். சைக்கிள்களில் வந்த குழுவினரும் சைக்கிளில் எறிவிட்டனர்.சிறிது நேரத்தின் பின்னர் கார் கொன்கிரிட் சுவர் ஒன்றுடன் மோதி தலைகீழாக புரண்டு அதன் கூரை தீப்பிடித்தது. மனிதர் சிறு காயங்களுடன் வெளியேறிவிட்டார். ஆனால் அவர் மீது நெடுஞ்சாலை போக்கு வரத்து குற்றச்சாட்டுக்கள் வீதி கட்டுப்பாடுகளை மீறிய குற்றங்கள் சுமத்தப்பட்டது.
சரிவிற்கு வழிவகுத்த துரத்தலிற்கு காரணம் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
பெண் பீல் பிராந்திய பொலிசாரால் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டார்.