பிரபல நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தன்னுடைய நீண்ட கால நண்பர் அலெக்சிஸ் ஒஹானியன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
9 கிராண்ட் ஸ்லாம்கள், 4 ஒலிம்பிக் தங்கங்கள், 85 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை என மகளிர் டென்னிஸின் தங்க மங்கையாகத் திகழ்பவர் செரினா வில்லியம்ஸ். செரீனாவுக்கும் அமெரிக்க பிசினஸ்மேன் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் செப்டம்பர் 1 அன்று பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஓஹானியன் ஜுனியர் (Alexis Olympia Ohanian Junior) என்று பெயர் சூட்டியிருக்கிறார் செரினா.
இந்நிலையில், நேற்று இரவு அமெரிக்காவின் நியூ ஆர்லியான்ஸ் நகரில் உள்ள சமகால கலை மையத்தில் நடந்துள்ளதாகத் தகவல் பரவியது. இதையடுத்து பிரபல ‘வோக்’ இதழும் புகைப்படத்துடன் செரினா திருமணத்தை அறிவித்தது. ஆனால், இன்று காலை செரினாவின் கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த அதிகாரப்பூர்வ தகவல் செரினா- அலெக்சிஸ் திருமணத்தை உறுதி செய்தது. திருமணக் கோலத்தில் செரினாவும் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவேற்றி அது சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.