திருகோணமலையின் ஒரு பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் உள்நுழைய முடியாதா?
திருகோணமலை சீன துறைமுகத்தில் அமைந்துள்ள எண்ணெய் தொட்டி தொகுதியில் 84 எண்ணெய் தொட்டிகள் குத்தகைக்கு பெற்றுக் கொண்டதாக கூறும் இந்திய நிறுவனம் சட்டவிரோதமாக செயற்படுதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு தற்போது இலங்கை அரசாங்கத்தின் ஒருவரையும் அந்த பகுதிக்குள் நுழைய இடமளிக்காமல் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றியுள்ளதாக இலங்கை பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
2003ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்ததிற்கமைய 6 மாதத்திற்குள் குத்தகை ஒப்பந்தம் செயற்படாமையினால் இந்திய நிறுவனத்திற்கு அந்த பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு எண்ணை தொட்டியையும் கையாள முடியாதென அந்த சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல தெரிவித்துள்ளார்.
இந்த முறையில் சட்ட விரோதமான முறையில் கையாளும் எண்ணை தொட்டிக்கு மேலதிகமாக மேலும் 16 எண்ணெய் தொட்டிகள் காணப்படுவதாகவும், அந்த எண்ணை தொட்டியை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அமைச்சரவை பத்திரம் ஒன்று அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அமைச்சரவை பத்திரத்திற்கமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு சீன துறைமுகத்தின் எண்ணைய் தொட்டி பகுதிக்கு சென்ற இலங்கை பெற்ரோலிய சங்கத்தின் அதிகாரிகளுக்கு, உள்நுழைய நிறுவன அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்திய அரசாங்கத்தின் உத்தரவின்றி இந்த பகுதிக்குள் நுழைவதற்கு இடமளிக்கப்படாதென அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தான நிலைமை எனவும் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.