அதிமுக-வை சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் தாவ தயாராக உள்ளதால் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்தது.
பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் சசிகலா அணிக்கே ஆதரவு தெரிவித்தால் ஆட்சி கவிழவில்லை.
இதனால் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்த திமுக ஏமாற்றமடைந்தது.
இதனிடையில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள இரு அணிகளும் ஒன்று சேர பேச்சுவார்த்தை நடத்தபடும் என அறிவிக்கபட்டது.
இரு அணிகளும் இணைந்தால் அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என இந்த முடிவு எடுக்கபட்டது.
இரட்டை இலை கிடைத்தால் அதிமுக-வை வரும் லோக் சபா தேர்தலில் எதிர்கொள்வது திமுக-வுக்கு சிரமம் என்பதால் திமுக தரப்பு கலக்கமடைந்தது.
இதனிடையில், சுயநலம் காரணமாக அதிமுக-வின் இரு அணிகளின் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கபடாமல் உள்ளது.
மேலும், சசிகலா அணியிலேயே அவர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு கோஷ்டிகள் உள்ளன.
முக்கியமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சமுதாயத்துக்கு கூடுதல் அமைச்சர் பதவியை கேட்டு வருகிறார்கள்.
இதையெல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திமுக தொடங்கியுள்ளது.
தற்போது திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் 15 அதிமுக எம்.எல்.ஏக்கள் அவர்கள் பக்கம் வர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்களை இழுக்கவும் திமுக முயற்சித்து வருகிறது.
இது நடக்குமேயானால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடர்ந்து கவிழ அதிக வாய்ப்புள்ளது.