கொரியப் பிராந்தியத்தில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டாம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105-வது பிறந்த நாள் நினைவு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதனால் தலைநகர் பியாங்யோங்கில் வடகொரிய ராணுவத்தின் பலத்தைப் பறைசாற்றும் விதத்தில் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது.
இந்நிலையில் வடகொரிய இராணுவ அதிகாரி சோய ரொங் ஹெய, வடகொரியா மீது முழுமையானதொரு போர் தொடுக்கப்பட்டால், திருப்பி தாக்கத் தயாராக இருக்கிறோம். அணு ஆயுத தாக்குதலுக்கு எதிராக எங்களுடைய பாணியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி வழங்குவோம் என்று கூறியுள்ளார்.
தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தாங்களும் அணுஆயுதத் தாக்குதல் நடத்தத் தயார் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் போர் சூழல் காரணமாக வட கொரியாவுக்கான அனைத்து விமான சேவைகளும் சீனா அதிரடியாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியா மற்றும் அமெரிக்காவின் இந்த மோதலால் உலகநாடுகள் போர் அபாயத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது.