தவற விட்ட தொடர்: குக்கின் தலைமை பதவிக்கு சிக்கல்
இந்தியாவிற்கு எதிரான தொடரை 0-4 என இழந்ததை தொடர்ந்து, இது குறித்து இங்கிலாந்து அணியின் தலைவர் அலஸ்டர் குக் கூறியதாவது,
தோல்விகளுக்கு சாக்கு போக்கு கூற விரும்பவில்லை. இந்தியா ஒரு சிறந்த அணி. இந்த தொடரின் வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்.
மதிய உணவு இடைவேளை நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் போட்டியை சமநிலைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் போது முக்கியமான வாய்ப்புகளை தவற விட்டோம். அதற்காக இந்திய அணி எங்களை தண்டித்து விட்டார்கள். இதனால் அவர்களை வேகத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது.
விராட் கோஹ்லிக்குப் பாராட்டுகள். அனைத்து பெருமையும் விராட் கோஹ்லிக்கே. அவர்கள் எங்களை போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டனர்.
எங்களைப் பொறுத்தவரை இது தவற விட்ட வாய்ப்புகள், நழுவ விட்ட பிடிஎடுப்புகளுக்கான தொடராக அமைந்தது.
போதிய ஓட்டங்கள் அடிக்க முடியாத நிலையில் போதிய விக்கெட்களையும் வீழ்த்த முடியவில்லை. அத்தோடு இந்தியாவில் விளையாடுவது என்பது கடினமானதும் தான் என்று கூறியுள்ளார்.
இந்த தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து அலஸ்டர் குக் விலகும் காலம் வந்துள்ளதாக, முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார்.
அலஸ்டர் குக் இந்த டெஸ்ட் தொடரின் தோல்வியை அடுத்து தமது எதிர்காலம் குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
அத்துடன் இறுதி 3 டெஸ்ட் போட்டிகளிலும் அலஸ்டர் குக்கின் செயற்பாடுகள் விரைவில் அவர் விலகும் தீர்மானத்தில் உள்ளதை உணர்த்துவதாகவும் வோகன் தெரிவித்துள்ளார்.